Sunday, November 9, 2014

couch mode print story

விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க..

விண்டோஸ் 7 -ல் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) பாதுகாப்பு வழிமுறை உருவாக்குவது பற்றிய பதிவு. விண்டோஸ் 7 -ல் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர்டிஸ்க் ( System Repair Disk ) உள்ளது. சில நேரங்களில் தேவைஇல்லாமல் தோன்றும் செய்திகளை நீக்க சிஸ்டம் ரீஸ்டோர் (System Restore) செய்வோம் ஆனால் பிரச்சினை பெரிதானால் இந்த சிஸ்டம் ரீஸ்டோர் வேலை செய்வதில்லை.இதற்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம் பிரச்சினைகளை சரிசெய்யலாம். சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) எப்படி உருவாக்குவது என்பதை பற்றி பார்ப்போம்.

-> Control Panel -ல் சென்று Backup and Restore என்ற ஐகான்-ஐ Click செய்யவும்.


இப்போது தோன்றும் விண்டோவில் இடதுபக்கத்தில் இருக்கும் Create a system repair disc என்பதை தெரிவு செய்யவும். இப்போது பதிவு செய்ய வேண்டிய புதிய டிவிடி டிஸ்கை உங்கள் DVD Drive-ல் செலுத்தவும்.
Create disc பட்டனை Click செய்யவும்.
இப்படி முழுமையான சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) உருவாக்கலாம். இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம். windows 7 -ல் தீர்க்க முடியாத சீரியஸ் Error வரும் போது இது உதவும்.கம்யூட்டர் ஆன் செய்யும் போது ( DEL button அல்லது F10 key ) மூலம் SETUP -ல் சென்று Boot Option -ல் First Boot Drive-ல் CD or DVD Option -ஐ select செய்யவும். இப்போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) உங்கள் DVD Drive-ல் செலுத்தவும். F10 Key அழுத்தி Save and Exit செய்யது வெளியேவரவும்.Restart ஆனவுடன் உங்கள் திரையில் press any key to start the computer from the system repair disc என்று தோன்றும். எதாவது ஒரு Key -ஐ press செய்யவும். இனி அதுவாக பிரச்சினைகளை இனம் கண்டு சரி செய்யும், எல்லாம் முடிந்து Restart ஆகும் போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உங்கள் DVD Drive-ல் இருந்து எடுத்துவிடவும். Windows 7 -ல் பாதுகாப்புக்கு பஞ்சம் இல்லை

Written by Mohit Verm@, personal technology columnist and founder of PC Gats. You can follow him on the social web or sign up for the email newsletter for your daily dose of how-to guides and video tutorials.




0 comments:

Post a Comment